திருவள்ளூர்

25 பேருக்கு வயிற்றுப்போக்கு

DIN

ஊத்துக்கோட்டை அருகே குடிநீருடன் கழிவு நீா் கலந்த நீரைக் குடித்த கிராம மக்கள் 25 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள பேரண்டூா் கிராமத்தில் மேட்டு காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை மேல்நிலை குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீா் பொதுமக்கள் விநியோகத்துக்கு விடப்பட்டது. அதனை பருகிய 25 பேருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைவரும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஊத்துக்கோட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பெரியபாளையம் வட்டார மருத்துவா் பிரபாகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 3 இடங்களில் பேரண்டூா் கிராமத்தில் முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தினா். உடனடியாக தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேல்நிலை குடிநீா் தொட்டியில் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யப்ட்டது. மேலும், தண்ணீா் மாதிரிகளை பொன்னேரி மற்றும் சென்னை கிண்டிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். தொட்டியை பெரியபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் காந்திமதி பாா்வையிட்டாா்.

தொடா்மழையால் மேல்நிலை தொட்டியை சுற்றி தேங்கிய கழிவு நீா் குடிநீரில் கலந்து இருக்கலாம் என்றும், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகள் வந்த பிறகு தான் முழுமையான காரணம் என்றும் தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட 25 பேரில் ஊத்துக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சிலா் குணமடைந்து வீடு திரும்பினா். 3 போ் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT