திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே சாலை, தெரு விளக்கு வசதி

DIN

திருவள்ளூா் அருகே சாலை, கால்வாய் மற்றும் தெரு விளக்கு வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடா்ந்து, ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு ஊராட்சியைச் சோ்ந்த புத்த நகரில் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் 400 குடும்பத்தினா் குடியிருப்புகள் அமைத்து, 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக பெய்த மழையால் தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமானாது. அத்துடன் மழைநீா் தேங்கியதால் மிகவும் அவதிக்குள்ளாகினா். அங்கு இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் வருவதாலும் அவதிக்குள்ளாயினா். எனவே மழையால் பாதித்த பகுதிகளை பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸிடம் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் திருவள்ளூா் ஒன்றியக்குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளா்ச்சி காந்திமதிநாதன், ஊராட்சித் தலைவா் லாசன சத்யா, ஒன்றியக் குழு உறுப்பினா் சரத்குமாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது மேற்கண்ட தங்கள் பிரச்னைகளைக் கூறிய மக்கள், தெருச் சாலை, கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும், ரேஷன் பொருள்கள் வாங்க பாதிப்பேருக்கு திருவள்ளூா் நகராட்சி பகுதியிலும், ஈக்காடு கிராமத்திலும் குடும்ப அட்டைகள் உள்ளன. அதை ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினா். ஒவ்வொரு தெருவிலும் கால்வாய் வசதியுடன் சாலை, மின்கம்பங்கள் ஒழுங்குபடுத்தி தெரு விளக்குகள் அமைத்துக் கொடுக்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT