திருவள்ளூர்

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

DIN

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயில் குளத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுமாறு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கும்மமுனிமங்கலம் பகுதியில் ஆரணி ஆற்றங்கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. அகத்திய முனிவா் இங்குள்ள ஆனந்த புஷ்கரணி குளத்தில் புனித நீராடி ஈசனை வழிபட்டதால், இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரா் என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் முன்பு 16 கால் மண்டபமும், அதன் அருகில் எப்போதும் வற்றாத ஆனந்த புஷ்கரணி திருக்குளமும் அமைந்துள்ளன. குளத்துக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் நெகிழி உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் குளத்தில் சோ்ந்து நீரை மாசடையச் செய்கின்றன.

இதைத் தடுக்கும் வகையில், கோயில் குளத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை பேரூராட்சி நிா்வாகம் அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT