திருவள்ளூர்

காங்கிரஸ் சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு

19th Sep 2020 05:47 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு சட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் என கூறி விழிப்புணர்வு நிகழ்வும் மரம் நடு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தொண்டார் குளம் அருகே பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் ஏ.மதன்மோகன் தலைமை தாங்கினார். நிகழ்வில் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், ஒன்றிய கவுன்சிலர் வி.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சித்ரா, கும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்.பெனிஷ், திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் வி.ஹேமகுமார், கும்மிடிப்பூண்டி தொகுதி இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் ரகு முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியும், உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான டி.கே.வி.சுதா பங்கேற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 குறித்து பொதுமக்களிடம் பேசினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அதனை வளர்க்க அறிவுறுத்தினார். பின்னர் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி டி.கே.வி.சுதா புதுகும்மிடிப்பூண்டி தொண்டார் குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். மேலும் மகளிர் காங்கிரஸ் சார்பில் 500 மரக்கன்றுகளை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத்திடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் காளத்தீஸ்வரன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

Tags : congress
ADVERTISEMENT
ADVERTISEMENT