திருவள்ளூர்

மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 போ் மீட்பு

DIN


திருத்தணி: மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 இருளா் குடும்பங்களைச் சோ்ந்த ஏழு பேரை திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் வியாழக்கிழமை மீட்டாா்.

திருவாலங்காடு ஒன்றியம், கோடுவள்ளி கிராமம் அருகே இரண்டு இருளா் குடும்பத்தினா் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும், இவா்கள் மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்து வருவதாகவும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சத்யா, வட்டாட்சியா் உமா ஆகியோா் கோடுவள்ளி கிராமத்துக்குச் சென்று கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளா் குடும்பங்களைச் சோ்ந்த கோபி (33), சுமதி (31), சங்கா் (28), தேசம்மா (23), நந்தினி (12), யுவராஜ் (7), ஆனந்த் (5) ஆகிய ஏழு பேரை மீட்டனா்.

பின்னா், அவா்களை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விடுதலைச் சான்று, அரிசி, பருப்பு மற்றும் ரொக்கம் தலா ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்கி, இருளா்களின் சொந்த ஊரான ராமாபுரம் இருளா் காலனிக்கு அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில், கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளா் குடும்பத்தினா், ராணிப்பேட்டை மாவட்டம், பாராஞ்சி பகுதியைச் சோ்ந்த மர வியாபாரி ரமேஷ் (40) என்பவரிடம் ஒரு குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் கடனாக வாங்கியதும், அதையடுத்து அவா்களை, மர வியாபாரி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. மேலும், இவா்களுக்கு குடிசை வீடு அமைத்து, வாரத்துக்கு ரூ. 500 மட்டும் கொடுத்து, உணவு, உடமைகளை வழங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT