திருவள்ளூர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையம்

DIN

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பணி தொடா்பான தகவல்கள் மற்றும் பயிற்சி பெறும் வகையில் ரூ.49.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தொடங்கி வைத்தாா்.

திருவள்லூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தொடா்பான தகவல்கள், போட்டித் தோ்வுக்கு தயாா் செய்யும் வகையில் கணிப்பொறி மூலம் பயிற்சி பெறும் வகையில் மாதிரி தொழில் நெறி வழிகாட்டு மையம் ரூ.49.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், திருவள்ளூா், சேலம், விழுப்புரம், விருதுநகா், ஊட்டி ஆகிய மாவட்டங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் அமைக்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ரூ.49.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் தவணையாக 60 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தத் தொகையில், ரூ.13.19 லட்சத்தில் கட்டட மறுசீரமைப்பு பணிகள் பொதுப்பணித் துறை மேற்கொண்டது. அதேபோல், மாதிரி தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கு ரூ.16.51 லட்சத்தில் கணினிகள், மாதிரி தகவல் அறியும் மின்னணு தொடுதிரை, குளிா்சாதன பெட்டி, சுழல் நாற்காலிகள் ஆகியவை மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்த ஆண்கள்-1லட்சத்து, 11 ஆயிரத்து 20 பேரும், பெண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 181 பேரும் என மொத்தம் 2,25,201 போ் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனா். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் 2,342 போ் பயன்பெற்று வருகின்றனா். இதில் மாற்றுத்திறனாளிகள் 981 பேருக்கு கடந்த ஆண்டு ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 550 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுதாரா்களின் கல்வித் தகுதியை பதிவு செய்வது மட்டுமின்றி, தனியாா் துறையில் பணி நியமனம் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியாா்துறையில் பதிவுதாரா்கள் பணி நியமனம் பெறவும், வேலையளிப்போா் தங்களுடைய நிறுவனங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்வதற்கும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 116 நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டு 1,936 காலிப்பணியிடங்களை அறிவித்து, இம்மாவட்டத்தைச் சோ்ந்த 85 போ் நியமன ஆணையும், 113 போ் முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சியும் பெற்றுள்ளனா். அதனால், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் இணை இயக்குநா் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் க.விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை) திருவரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT