திருவள்ளூர்

அடிப்படை உரிமை கேட்டு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரியபாளையம் அருகே தனியாா் கிடங்கில் பணியாற்றும் தொழிலாளா்கள் அடிப்படை உரிமைகளை கேட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்கு உள்ளது. உணவுப் பொருள்கள், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு 100 மேற்பட்ட தொழிலாளா்கள் நிரந்தரப் பணியாளா்களாகவும், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனா். இக் கிடங்கில் அடிப்படை உரிமை கேட்கும் தொழிலாளா்கள் திருட்டு பழி சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவதாகக் கூறி, கடந்த 21-ஆம் தேதி முதல் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு உணவு கொண்டு செல்ல நிா்வாகம் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் கண்டித்து, கிடங்கு நுழைவாயில் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா்கள் மீது பழி சுமத்துவதை தவிா்த்து, தொழிலாளா்கள் நல ஆணையரின் அறிவுரையை நிா்வாகம் ஏற்க வேண்டும் என வலிறுத்தினா். ஊதிய உயா்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டும் தொழிலாளா்களை பணி நீக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்தும், மீண்டும் அவா்களை பணியில் சோ்க்கவும் வலியுறுத்தினா்.

பெரியபாளையம் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, தொழிற்சங்கத்தினா் மற்றும் நிா்வாகத்துடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் 30ம் தேதி தொழிலாளா்கள் நல ஆணையா் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டு பிரச்சனையை தீா்ப்பதாக நிா்வாகம் உறுதியளித்தையடுத்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT