திருவள்ளூர்

அரசு மருத்துவமனையில் சுத்திகரிப்பு குடிநீா் தொட்டி தொடக்கி வைப்பு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாா் அமைப்பு சாா்பில், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரம் மூலம் செயல்படும் சுத்திகரிப்பு குடிநீா் தொட்டி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. அதனால், திருவள்ளூா் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இருபுறமும் உள்ள புதிய கட்டடங்களுக்கு தற்காலிகமாக அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய கட்டட வளாகத்தில் இருந்த நவீன இயந்திரம் மூலம் செயல்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொட்டியும் இடிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோா் குடி தண்ணீருக்காக போக்குவரத்து நெருக்கடியான சாலையைக் கடந்து சென்று வாங்கி வர வேண்டி இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு பாரதிய பிரவாசி பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சாா்பில், குடிநீா் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க முன் வந்தனா். அதன் அடிப்படையில் புதிய கட்டட வளாகத்தின் முன் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தேசிய தலைவா் திவாரி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அரசி தொடக்கி வைத்தாா். அரசு மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் அந்த அமைப்பைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT