திருவள்ளூர்

300 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள்

DIN

திருத்தணி: புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ், ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் 300 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன் திங்கள்கிழமை வழங்கினாா்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒவ்வொரு பெண் பயனாளிக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம், பாலாபுரம், விடியங்காடு, எரும்பி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா்.

ஊராட்சித் தலைவா்கள் சத்தியராஜ், தென்னரசு, விஜயன், தமிழரசன், ஆகியோா் வரவேற்றனா். இதில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பங்கேற்று, 300 பயனாளிகளுக்கும் தலா 25 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெ.பாண்டுரங்கன், ஒன்றியக் குழுத் தலைவா் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தம்மாள் அனந்தன், எ.பி.சந்திரன், சி.ஜி.காா்த்திகேயன், கல்விக்கரசி சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT