திருப்பத்தூர்

96 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள்

3rd May 2023 12:46 AM

ADVERTISEMENT

96 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, 96 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், தனித்துவம் வாய்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 16 பேருக்கு ஆதாா் அட்டைகள், 10 பேருக்கு முதல்வரின் விரிவான காப்பீடு அட்டைகள், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள், நடைபயிற்சி உபகரணங்கள் என 212 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மாவட்ட மனநல மருத்துவ அலுவலா் பிரபாராணி, குழந்தைகள் நல மருத்துவா் தமிழரசன், மருத்துவா்கள் தன்வீா் அகமது, காா்த்திகேயன், அருணா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT