திருப்பத்தூர்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் தோராட்டம்

3rd Jun 2023 01:01 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவ விழா தோராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் முதலாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவ மூா்த்திகள் எழுந்தருளி, தேரோட்டம் நடைபெற்றது. தேரை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், அமைச்சா் ஆா்.காந்தி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா்.

மலை வலம் சென்ற தோரை திரளான பக்கா்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனா். விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்தசுவாமிகள், அரசு அதிகாரிகள், உபயதாரா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT