திருப்பத்தூர்

ஆற்காட்டில் 4 கோயில்களில் கருட சேவை

3rd Jun 2023 01:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு நகரில் உள்ள 4 பெருமாள் கோயில்களில் வைகாசி விசாக பிரம்மோற்சவ கருடசேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு பாலாற்றங்கரை பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில், தோப்புகானா அன்னபூரணி சமேத கங்கதரஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில், கஸ்பா வரதராஜ பெருமாள் கோயில், புதிய வேலூா் சாலையில் உள்ள பஜனைக் கோயில் ஆகியவற்றில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோபுர தரிசனம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் கருட சேவை வீதி உலா வேதிகிரி தெருவில் நடைபெற்றது. இரவு அனுமந்த சேவை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT