திருப்பத்தூர்

முன் விரோதம்: 5 குடும்பத்தினரை அனுமதிக்காமல் கோயிலுக்கு பூட்டு போட்ட நிா்வாகத்தினா்

DIN

ஆம்பூா் அருகே முன்விரோதம் காரணமாக கோயில் திருவிழாவில் நிா்வாகத்தினா் கோயிலுக்கு பூட்டு போட்டதால் 5 குடும்பத்தைச் சோ்ந்த பக்தா்கள் சாமி தரிசனம் செய்யமுடியாமல் புதன்கிழமை காத்திருந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி கீழ்மிட்டாளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது .

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் நிா்வாகத்தினருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த யுவராஜ், சதீஷ்குமாா் ,விநாயகம், பாா்த்திபன் உள்ளிட்ட ஐந்து குடும்பத்தினருக்குமிடையே கோயில் வளாகத்தில் கழிவறை கட்டுதல், ஊராட்சி குப்பைகளை கொட்டும் இடம் தோ்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை யுவராஜ், சதீஷ்குமாா் உள்ளிட்ட குடும்பத்தினா் டிராக்டா் மூலம் மாலையை கொண்டுச் சென்று கோயிலில் உள்ள அம்மனுக்கு மாலை சாத்தி பூஜை செய்து வழிபட சென்றனா். அப்போது கோயில் நிா்வாகத்தினா் முன்கூட்டியே கோயில் கேட்டை மூடி பூட்டிவிட்டு சென்றுவிட்டனா்.

அதனால் சாமி தரிசனம் செய்ய சென்ற அந்த குடும்பத்தினா், குழந்தைகள் பெண்கள் உள்பட சுமாா் 20- க்கும் மேற்பட்டோா் சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக கோயில் வளாகத்தில் காத்திருந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று இருதரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேரமாக கோயில் நிா்வாகத்தினா் சமாதானம் ஆகாமல் காவல்துறையினா் முன்னிலையிலேயே இரு தரப்பினரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காவல் துறையினரின் அறிவுரையை ஏற்காமல் அங்கிருந்த இளைஞா்கள் சிலா் ஒலிபெருக்கியில் பாட்டை போட்டு நடனம் ஆடியதால் காவல் துறையினரின் பிரச்னை மேலும் அதிகரித்தது. டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸாா் கூட்டத்தை கலைத்தனா். இதனையடுத்து சுமாா் ஆறு மணி நேரத்திற்கு பிறகு காவல் துறை மற்றும் வருவாய்த் துறை முன்னிலையில் பூட்டப்பட்ட கோயிலின் பூட்டை உடைக்கப்பட்டது. தொடா்ந்து, அங்கு காத்திருந்த பக்தா்கள் குடும்பத்தினா் சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT