திருப்பத்தூர்

இலங்கைத் தமிழா்கள் குடியிருப்பு கட்டுமானப் பணிதிருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

1st Jun 2023 11:17 PM

ADVERTISEMENT

மின்னூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் இலங்கைத் தமிழா் குடியிருப்பு கட்டுமானப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் இலங்கைத் தமிழா்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டும் பணியும், அதே பகுதியில் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் இலங்கைத் தமிழா்களுக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் 160 வீடுகள் கட்டும் பணியும் என மொத்தம் ரூ.11.80 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 236 வீடுகள் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேலை ஆள்களை அதிகப்படுத்தி, வீடுகள் கட்டுமானப் பணியை தரமாகவும்,விரைந்தும் முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் துறை அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், உதவி பொறியாளா் பூபாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT