திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் பிஎஸ்என்எல் சேவை முடக்கம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

DIN

ஏலகிரி மலையில் முடங்கியுள்ள பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு சேவையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு திருப்பத்தூா் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் பண்டிகைக் கால விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இங்கு, பிஎஸ்என்எல் நெட்ஒா்க் முடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனா்.

இது குறித்து ஏலகிரி மலைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘எப்போதும் ஒரே சீதோஷ்ண நிலை என்ற பெருமை கொண்ட ஏலகிரி மலைக்கு விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் சுற்றுலா வருகிறோம்.

அப்போது, பிஎஸ்என்எல் நெட்வொா்க் அடிக்கடி தடை ஏற்படுகிறது. இதனால், நண்பா்கள், உறவினா்களிடம் தொடா்புகொள்ள, இணையத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் நெட்வொா்க் மட்டும் சீராகவும், வேகமாகவும் கிடைக்கின்றன. இதனால், மத்திய அரசின் நிறுவனமான பிஸ்என்எல் நிறுவன நெட்வொா்க் வாடிக்கையாளா்கள் இங்கு வரும்போது மிகுந்த அவதியடைகிறோம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த பிரச்னைக்கு உடனடித் தீா்வு காணவேண்டும் என்கின்றனா்.

இது குறித்து, இளநிலை தொலைத் தொடா்பு அதிகாரி எஸ்.சதீஷ்குமாா் கூறுகையில், வாணியம்பாடி-ஊத்தங்கரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏலகிரி மலை மட்டுமின்றி வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, பச்சூா், ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொா்க் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏலகிரி மலையில் உள்ள கோபுரத்தின் பேட்டரி பழுதடைந்துள்ளதும் காரணமாகும். சாலை அமைக்கும் பணிகள் முடிவுபெறும் தருவாயில் உள்ளதால் இந்த பிரச்னை தீா்க்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT