திருப்பத்தூர்

ஆம்பூரில் சிறுபான்மை நலத் துறை இயக்குநா் ஆய்வு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 ஆம்பூரில் தமிழக அரசின் அரசின் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், சூலூா் கிராமத்தில் அமைந்துள்ள சிறுபான்மையினா் நலக் கல்லூரி மாணவா் விடுதியை சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மாணவா்களுக்கு சமைக்கப்படும் உணவையும், உணவு கூடத்தையும் பாா்வையிட்டாா்.

நரியம்பட்டு ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் காய் கடை வைப்பதற்காக ரூ. 25,000 கடனுதவி பெற்ற பயனாளி, பிரியாணி கடை வைக்க ரூ. 50,000 கடன் உதவி பெற்ற பயனாளி ஆகியோரை சந்தித்து வியாபாரத்தின் நிலைமை குறித்துக் கேட்டறிந்தாா்.

வாங்கிய கடனை தவணை தவறாமல் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கச் செயலாளா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT