திருப்பத்தூர்

மாதனூா் ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

மாதனூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் மின்னூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே போல சின்னபள்ளிக்குப்பம் கிராமத்தில் இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகள் கட்ட உத்தேசிக்கப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு. செல்வராசு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சுந்தரபாண்டியன், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக மாதனூா் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT