திருப்பத்தூர்

ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

ஆம்பூா் அருகே ஷூ தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம், சின்னவரிக்கம் கிராமத்தில் தனியாா் ஷூ தொழிற்சாலை இயங்கி வருகிறது. திங்கள்கிழமை இரவு திடீரென தொழிற்சாலையில் தீப் பிடித்து எரியத் தொடங்கியது. தொழிற்சாலையின் மூலப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் முழுவதுமாக பரவியதால் மூலப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT