திருப்பத்தூர்

பள்ளி சமையலறை, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு

8th Oct 2022 12:09 AM

ADVERTISEMENT

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சி அரசுப் பள்ளி சத்துணவுக்கூட சமையலறை மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கு மின் வசதி, எரிவாயு அடுப்பு வசதியை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தாா். அங்கு சமைக்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு பாா்த்து, அதன் தரத்தை ஆய்வு செய்தாா். மேலும், பள்ளி மாணவா்களுக்கு தரமான உணவு, முட்டை சரிவர வழங்கப்படுகிா என்பது குறித்து அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தீபா, ஆப்ரின்தாஜ், ஆ.காா்த்திக் ஜவஹா், ஒன்றிய பொறியாளா் ஜூலியட் தங்கம், ஊராட்சித் தலைவா் பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT