திருப்பத்தூர்

மாதனூா் ஒன்றியத்தில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

7th Oct 2022 12:25 AM

ADVERTISEMENT

மாதனூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித்துறையின் திருமலைகுப்பம் ஊராட்சி கௌரிபுரம் கிராமத்தில் ரூ.3.87 லட்சம் மதிப்பில் 100 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலைப் பணி, மாதனூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பில் எம்.எம். நகா் கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருமலைகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.42 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கழிப்பறை கட்டட கட்டுமானப் பணி, வெங்கிலி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடக் கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு ஊதியம் சரியாக குறிப்பிட்ட நாள்களுக்குள் காலதாமதமின்றி வழங்கப்படுகிா என்று கேட்டாா். குடிநீா் வழங்கல், பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை 2 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும். மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளி வளாகங்களையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், சந்திரன், உதவிப் பொறியாளா் பூபாலன், பணிமேற்பாா்வையாளா் சாந்தகுமாரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT