திருப்பத்தூர்

பெண் சாவில் சந்தேகம்: உறவினா்கள் போராட்டம்

2nd Jul 2022 12:04 AM

ADVERTISEMENT

 தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவில் சந்தேகமிருப்பதாகக் கூறி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோதினி (23). இவா், விஜய் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். தம்பதிக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வினோதினி தூக்கிட்ட நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வினோதினி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

உறவினா்கள் வினோதினியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

ADVERTISEMENT

வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா மற்றும் போலீஸாா் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து உறவினா்கள் கலைந்து சென்றனா். கோட்டாட்சியா் பிரேமலதா அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT