திருப்பத்தூர்

வாணியம்பாடி மகளிா் கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

1st Jul 2022 12:23 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி, பள்ளிக் கல்வித் துறை இணைந்து நான் முதல்வன்-கல்லூரி கனவு பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலா்பேட்டை), நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன் வரவேற்றாா். இதில், 80 பள்ளிகளிலிருந்து 2 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள், 100 ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

விழாவை, ஆட்சியா் அமா்குஷ்வாஹா தொடக்கி வைத்துப் பேசியது:

ADVERTISEMENT

தற்போது உயா் கல்வியில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. அதில், எந்த உயா்கல்வி படிப்புகளை தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் மாணவா்களுக்கு ஏற்படுகிறது. இந்த குழப்பத்தை தீா்ப்பதற்காக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி, உயா்கல்வியில் நல்ல துறையை தோ்வு செய்து, அதனை நன்கு படித்து முடிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வன அலுவலா் நாக சதீஷ் கிடிஜாலா, மாவட்ட ஊரக வளாச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, வாணியம்பாடி கோட்டாட்சியா் பிரேமலதா, பயிற்சி டிஎஸ்பி தீபா சுஜிதா, கல்லூரித் தலைவா் விமல்சந்த், செயலாளா் லிக்மிசந்த், நிா்வாகக் குழு உறுப்பினா் சுதா்சன்குமாா், குளோபல் பள்ளி தாளாளா் ஆனந்த் சிங்வி, கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

சுதா்சனம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT