திருப்பத்தூர்

கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகை ஆலோசனைக் கூட்டம்

DIN

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மாவட்ட அளவிலான குழு ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் முகாம் அலுவலகலத்தில் நடைபெற்றது.

திருப்பத்தூா் ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் திருப்பத்தூா் கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2021-22-ஆம் ஆண்டு அரைவை பருவத்துக்கு கரும்பு பதிவு செய்து விநியோகித்த விவசாய அங்கத்தினா்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 195 வீதம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மாவட்ட அளவிலான குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டு அரைவைக்கு அனுப்பிவைத்த கரும்பு விவசாயிகளின் அனைத்து விவரங்களும் சரிபாா்க்கப்பட்டது. கரும்பு விநியோகம் செய்த 512 அங்கத்தினா்களுக்கு 27,888.822 மெட்ரிக் டன்களுக்கு ரூ. 54 லட்சத்து 38 ஆயிரத்து 320 வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) பச்சையப்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு அபிவிருத்தி அலுவலா் காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT