திருப்பத்தூர்

கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க தாட்கோ நிதி

DIN

விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கரணைகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கரணைகள் வாங்குவதற்கு 1 நபருக்கு ரூ. 10,000 (ஒரு ஏக்கருக்கு) வழங்க அரசாணை வரப்பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-க்கு மேல் 65-க்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளா், தாட்கோ, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT