திருப்பத்தூர்

உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் தா்னா

DIN

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களுக்கான கூட்டம் நடைபெற்றபோது அதிமுக உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

உதயேந்திரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். செயல்அலுவலா் ரேவதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டாா். திமுகவைச் சோ்ந்த 8 உறுப்பினா்கள், அதிமுகவைச் சோ்ந்த 6 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் சுயேச்சை ஒருவா் என மொத்தம் 15 வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், 2-ஆவது வாா்டு பகுதியில் புதிதாக வீட்டு மனைகள் அமைக்க ஒப்புதல் வழங்குவது தொடா்பான தீா்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது உறுப்பினா் சரவணன் (அதிமுக) பேசுகையில், மன்றக் கூட்டத்தில் பாா்வையாளராக இருந்த 2-ஆவது வாா்டு உறுப்பினா் பரிமளாவின் கணவா் முருகவேல் குறுக்கிட்டு தீா்மானம் குறித்து பேசியுள்ளாா். அதற்கு ஆ.செல்வராஜ் தலைமையிலான திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, திமுக, அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து அலுவலக வாயிலில் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த காவல்ஆய்வாளா் ஜெயலட்சுமி, தாலுகா போலீஸாா் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் ரேவதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மீண்டும் கூட்டம் ஓரிரு நாள்களில் நடத்தப்படும் என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT