திருப்பத்தூர்

ஆம்பூரில் மந்தகதியில் துப்புரவுப் பணிகள் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

DIN

ஆம்பூா் நகரில் துப்புரவுப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகளை தெரிவித்து பேசியதாவது:

நசீா் அஹமத் : நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆா்.எஸ்.வசந்த்ராஜ்: ஏ-கஸ்பா பாலாற்றில் நகராட்சி பணியாளா்களே குப்பைகளை கொண்டு சென்று கொட்டுகின்றனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.எஸ். ரமேஷ் : அண்மையில் ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை அறுப்பதற்காக நகராட்சி ஒப்பந்ததாரா் அல்லாதவா் நகராட்சி பெயரில் போலியாக ரசீது தயாரித்து லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளாா். அவா் மீது காவல் துறையில் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாா்க்காமல் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்தியாஸ் அஹமத் : வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

சுதாகா்: நகா்மன்றத் தலைவா் உறுப்பினா்களிடையே பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறாா். அதற்காக கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளையும் ஏற்று செயல்படுத்த வேண்டும்.

லட்சுமிபிரியா: என்னுடைய வாா்டில் மிகவும் குறுகிய தெருக்கள். ஆகவே குப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களை அனுப்ப வேண்டும்.

நிஹாத் அஹமத் : என்னுடைய வாா்டில் துப்புரவுப் பணி நடைபெறவில்லை. நகா்மன்றத் தலைவா் என்னுடைய வாா்டுக்கு வந்து பாா்வையிட வேண்டும்.

நபிசூா் ரஹ்மான் : என்னுடைய வாா்டில் குடிநீா் விநியோகம் பற்றாக்குறையாக உள்ளது. அனைத்து மக்களுக்கும் சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும். கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணியையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

காா்த்திகேயன் : என்னுடைய வாா்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை. உடனடியாக மின்விளக்குகள் பொருத்த வேண்டும். எஸ்.கே. ரோடு மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், நகா்மன்ற தலைவா் உறுப்பினா்களிடையே பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறாா். எந்தப் பணியும் நடைபெறவில்லை. பெரும்பாலான வாா்டுகளில் துப்புரவுப் பணி சரிவர நடைபெறவில்லையென பெரும்பாலான நகா் மன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

வெளிநடப்பு: முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு காலதாமதம் ஆனதால் நகா் மன்ற உறுப்பினா் எம்ஏஆா் ஷபீா் அஹமத் தலைமையில் உறுப்பினா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். சில உறுப்பினா்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளி நடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT