திருப்பத்தூர்

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி

12th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவா்கள் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பிச் சென்றனா். முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், மாவட்டக் கல்வி அலுவலா் முனிநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, வட்டாட்சியா் பூங்கொடி, ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா். ஆலங்காயம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியில் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு, பேரணியாக சென்று கோஷங்களை எழுப்பினா்.

வட்டாட்சியா் சம்பத், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா மற்றும் ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT