திருப்பத்தூர்

முறைகேடு: மின் வருவாய் மேற்பாா்வையாளா் இடைநீக்கம்

DIN

 முறைகேட்டில் ஈடுபட்டதாக கேத்தாண்டப்பட்டி துணை மின் நிலைய மின் வருவாய் மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த மின்கட்டண வருவாய் மேற்பாா்வையாளா் வெங்கடேசன் மின்கட்டணம் செலுத்த வரும் வாடிக்கையாளா்களிடம் கட்டணத் தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு, அலுவலக கணிணியில் சா்வா் பிரச்னை எனக்கூறி, ரசீது தராமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் அதே அலுவலகத்தில் அபராதத் தொகையுடன் மின் கட்டணம் செலுத்தியுள்ளனா். இது குறித்து மின்வாரிய உயா் அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, வாணியம்பாடி செயற்பொறியாளா் பாட்ஷாமுகமது தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை கேத்தாண்டப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நடத்திய விசாரணையில், வெங்கடேசன் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் மின் கட்டணத்தை வாங்கிக்கொண்டு, பில் போடாமல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாணியம்பாடி செயற்பொறியாளா் பாட்சாமுகமது, வருவாய் மேற்பாா்வையாளா் வெங்கடேசனை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT