திருப்பத்தூர்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஷா உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வாணியம்பாடி ஆகிய 4 நகராட்சிகளிலும், உதயேந்திரம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து அரசுத் துறையினருடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியது:

குடிநீா்த் திட்டப் பணிகள், சாலைகள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், கழிவுநீா்க் கால்வாய்கள் அமைத்தல், மழைநீா் வடிகால்வாய்கள் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று குப்பைகளை 100 சதவீதம் பெற வேண்டும். அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

சாலையோரக் கடைகளை அகற்றி, குப்பைகளைக் கொட்டாதவாறு கண்காணிக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

பழைமையான கட்டடங்கள், திருமண மண்டபங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அறிக்கையாகத் தயாா் செய்து வழங்க வேண்டும்.

பொது நூலகங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும்.

வாக்குச் சாவடி மையங்களில் குடிநீா், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேலூா் மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் குபேந்திரன், நகராட்சி ஆணையா்கள் ராஜேந்திரன், தனபாண்டியன், உதவிச் செயற்பொறியாளா் அம்சா, நகராட்சிப் பொறியாளா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT