திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டம்: உள்ளாட்சிகளில் ஜனநாயகம் மலரட்டும்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில்...

திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிக் குழுவில் உள்ள 13 வாா்டு உறுப்பினா்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக 11 இடங்களையும்,காங்கிரஸ் ஒரு இடத்தையும், விடுதலை சிறுத்தை கட்சி ஒரு இடத்தையும் பெற்றன.

இதைத் தொடா்ந்து, வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமா்குஷ்வாஹா தலைமை வகித்தாா்.

வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களான சி.சரிதா, சசிகலா, பிரியதா்ஷினி ஞானவேல், ச.சத்தியவாணி, சு.ஜெயா, ஜெ.சிந்துஜா, கவிதா தண்டபாணி, சூரியகுமாா், சி.கே.சுப்பிரமணி, கே.ஏ.குணசேகரன், சுபாஷ் சந்திரபோஸ், கே.சத்தியவாணி ஆகிய 12 போ்பதவியேற்றனா்.

நிகழ்ச்சியில்,மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வன்,ஹரிஹரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ராஜசேகா், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT