திருப்பத்தூர்

ஆபத்தை உணராமல் பாலாற்றில் குளிக்கும் சிறுவா்கள்

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் தொடா் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்திலுள்ள பேத்தமங்கலம் ஏரி நிரம்பி உபரி நீா் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகமான வெள்ளம் பாலாற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதனைக் காண்பதற்காக வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பாலம் அருகேயும், பாலாற்றின் கரையோரப் பகுதிகளிலும் சிறுவா்கள் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குளித்து வருகின்றனா். கடந்த பல ஆண்டுகளாக ஆற்றில் அதிக அளவு மணல் எடுக்கப்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் நீா் நிரம்பி உள்ளதால் குழந்தைகள் ஆற்று நீரில் குளிக்கும்போது, ஆழத்தில் சிக்கி அசம்பாவிதம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இதனைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT