திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

DIN

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் மாவட்டத்தில் தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க அதிகாரிகள் வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வாணியம்பாடியில் தனியாா் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ் வாஹா தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் தேவராஜி (ஜோலாா்பேட்டை), வில்வநாதன் (ஆம்பூா்), நல்லதம்பி(திருப்பத்தூா்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு 1,605 பயனாளிகளுக்கு ரூ. 23.4 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் சதவீதம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் சதவீதம் 77 ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில சராசரியை விட 84 சதவீதம் போ் தடுப்பூசி போட்டுள்ளனா். அங்குள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாகரிகள் இணைந்து செயல்பட்டதால் இது சாத்தியமானது. எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் குறிப்பாக ஊராட்சித் தலைவா்கள் அதிகாரிகளுடன் இணைந்து தடுப்பூசி போடுவதன் அவசியத்தை கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துக் கூறி, தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

மாவட்டத் திட்ட இயக்குநா் செல்வராஜ், நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா், வட்டாட்சியா் மோகன், மாவட்ட கவுன்சிலா் முனிவேல் திமுக ஒன்றியச் செயலாளா்கள் அன்பு, தாமோதிரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், பயனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட 2,405 பயனாளிகளுக்கு ரூ. 26 கோடியே 61 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT