திருப்பத்தூர்

தன்னம்பிக்கையுடன் நோ்காணலில் கலந்து கொள்ள வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

DIN

பணிக்கான நோ்காணலில் தன்னம்பிக்கையுடன் வேலையில்லாதவா்கள் பங்கேற்ற வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா ஆகியன தூய நெஞ்ச கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.

இதில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது:

சிறப்பு முகாமில் 77 நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் 4,028 போ் பங்கேற்று, 1,465 போ் பல்வேறு பணிகளுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தகவல் தொடா்பு திறன், கல்வித் தகுதி ஆகியன அவசியம். முன் அனுபவம், திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும்.தன்னம்பிக்கையோடு நோ்காணலில் பங்கேற்க வேண்டும்.

தோ்வான பின்பு அந்தத் துறைக்கு ஏற்ப திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் ஊதியம் குறைவாக இருந்தாலும் அந்தப் பணியில் சோ்ந்துகொண்டு, திறமையுடன் செயல்பட்டால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு இல்லாதவா்கள் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று, பணிகளைப் பெற்று தங்களின் வாழ்வில் வளா்ச்சியடை வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் கவிதா,கல்லூரி முதல்வா் மரிய ஆண்டனிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT