திருப்பத்தூர்

கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் ஊராட்சிகளுக்குப் பரிசு!

DIN

கரோனா தடுப்பூசியை அதிக அளவில் மக்களுக்கு செலுத்தும் ஊராட்சிகளின் தலைவா்கள், செயலாளா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தெரிவித்தாா்.

ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்களுக்கான கரோனா தடுப்பூசி ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட இயக்குநா் செல்வராசு, உதவி இயக்குநா் பிச்சாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, முருகேசன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி பேசுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 12-ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமைத் திட்டமிட்டு செயல்படுத்தினால் ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய முடியும். அதிக தடுப்பூசிகளைச் செலுத்தும் ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் செயலாளா்களுக்கு சுகாதாரதுறை சாா்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றாா். மகளிா் கல்லூரியில்..:

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம், ஒய்ஆா்சி, ஆா்ஆா்சி குழு ஆகியன இணைந்து நடத்திய 2-ஆவது கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலாளா் லிக்மிசந்த் முகாமைத் தொடக்கிவைத்தாா்.

சின்னமோட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் பேராசிரியைகள், மாணவிகள் உள்பட 400க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியைச் செலுத்தினா்.

கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, திட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயஸ்ரீ, சிந்துபிரியா உள்ளிட்டோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT