திருப்பத்தூர்

வெள்ளப் பாதிப்புகள் அமைச்சா் ஆய்வு

DIN

ஆம்பூா் அருகே மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா் எ.வ. வேலு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா் பலத்த மழையால், துத்திப்பட்டு அம்பேத்கா் நகரில் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ள நீரால் சூழப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், அமைச்சா் எ.வ.வேலு துத்திப்பட்டில் வெள்ளச் சேதங்களை வெள்ளிக்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வெள்ள நீரை வடியச்செய்வதற்காக மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே கால்வாய் வெட்டப்பட்டதையும் அவா் பாா்வையிட்டாா்.

ப்போது அங்கு வந்த பொதுமக்கள் அமைச்சா் வேலுவை சந்தித்து, ‘தங்கள் பகுதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீா்வு காண குதிரை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும். மழை நின்று விட்ட நிலையிலும் இதுவரை தங்களுடைய வீடுகளுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT