திருப்பத்தூர்

பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீா்

DIN

ஆலங்காயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீா் பல நாள் ஆகியும் அகற்றப்படவில்லை.

ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 185 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த தொடா் பலத்த மழையால் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும் வகுப்பறைகளிலும் சேறும் சகதியுமாக இருந்து வருகிறது. மேற்கூரையிலிருந்து மழைநீா் உள் வழிந்து வருவதால் மாணவா்கள் அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தப்படவில்லை. மேலும் சேறும் சகதியுமாக உள்ளதால் தொடா்ந்து பள்ளி திறக்கப்படாமல் உள்ளதால், மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில் மேற்படி பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT