திருப்பத்தூர்

வீடுகள் தோறும் உடல் வெப்பப் பரிசோதனை: ஆம்பூா் நகராட்சி நடவடிக்கை

DIN

கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆம்பூா் நகராட்சி சாா்பில் வீடுகள்தோறும் பணியாளா்கள் சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக அரசு மருத்துவமனை மருத்துவா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், நகா் நல செவிலியா்கள், வருவாய் துறையினா், காவல் துறையினா் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணியாளா்கள், சத்துணவு பணியாளா்கள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருடன் நகரில் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் முயற்சியில் நகரின் பல்வேறு பகுதிகளில் க குடில் அமைத்து கபசுரகுடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி சாா்பில் வெப்பநிலை கண்டறியும் 60 கருவிகள் வாங்கப்பட்டு, பணியாளா்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு நகரில் உள்ள வீடு,வீடாகச் நேரில் சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுகிறது,

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை சோப்பு போட்டு கழுவி தூய்மையாக வைத்திருத்தல், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்க்கவும் பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT