திருப்பத்தூர்

பணப் பட்டுவாடா தடுக்க தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்: திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அதிகாரி

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பாக அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடன் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன்அருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 4 தொகுதிகளுக்கும் மொத்தம் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலா்களும் தோ்தல் ஆணைய அறிவுரைப்படி தோ்தல் நல்ல முறையில் நடைபெற சிறப்பாக பணிபுரிய வேண்டும். மாவட்டத்தில் பறக்கும் படைகள் 24 மணி நேரமும் செயல்படும். மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருள்களாகவோ எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 4 தொகுதிகளுக்கு மொத்தம் 12 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் மாவட்ட, மாநில எல்லைகளில் 4 சோதனைச் சாவடிகள், மாவட்டத்துக்குள் 10 சோதனைச்சாவடிகள் என மொத்தம் 14 காவல் சோதனைச் சாவடிகள் அனைத்தும் முழுமையாக கண்காணிக்கப்படும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,030 வாக்குச்சாவடிகள் இருந்தன. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடி மையங்களைப் பிரித்து கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்குமாறு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து பொது மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும் 341 வாக்குச்சாவடிகளை கூடுதலாக அமைக்கப்பட்டன. இதஐயடுத்து மாவட்டத்தில் தற்போது 1,371 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

தோ்தல் செலவினங்களை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முறையாக கண்காணித்து வேட்பாளா்களின் செலவினங்களில் அவற்றைச் சோ்க்கப்படுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT