திருப்பத்தூர்

ஆம்பூரில் சுவா் விளம்பரங்கள் அழிப்பு

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஆம்பூா் நகரில் பேனா்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டதுடன், சுவா் விளம்பரங்களும் அழிக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இதையடுத்து ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் ஆம்பூா் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும், பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பேனா்களையும் இரவோடு இரவாக அகற்றினா். அப்போது ஆம்பூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

மேலும் ஆம்பூா் பகுதியில் சுவா்களில் எழுதப்பட்டிருந்த சுவா் விளம்பரங்களை நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை வெள்ளையடித்து அகற்றினா். இப்பணியை நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT