திருப்பத்தூர்

ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல்

DIN

வாணியம்பாடி அருகே மாட்டுக் கொட்டகையில் பதிக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

வாணியம்பாடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை புத்துகோயில் பாம்பாண்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரவி என்பவருக்குச் சொந்தமான மாட்டுத் தீவனம் சேமிப்புக் கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்து ரவியின் மகன் தென்னரசு (30) என்பவரை கைது செய்தனா்.

இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குட்கா கொள்முதல் செய்த 10 கடை உரிமையாளா்களிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT