திருப்பத்தூர்

ஜவ்வாது மலையில் பெருங்கற்காலப் புதைவிடம் கண்டுபிடிப்பு

DIN

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலையில் சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலப் புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியா் க.மோகன்காந்தி தலைமையில், தொல்லியல் அறிஞா் வெங்கடேசன், காணி நிலம் முனிசாமி, ஆசிரியா் அருணாசலம் மற்றும் ஆய்வு மாணவா்கள் திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது,பெருங்கற்காலப் புதைவிடத்தை அவா்கள் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து பேராசிரியா் க.மோகன்காந்தி கூறியது:

மனித இன வரலாற்றை பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், இரும்புக் காலம் என தொல்லியல் அறிஞா்கள் பல வகைப்படுத்துவாா்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெருங்கற்காலப் புதைவிடங்கள் கிடைத்துள்ளன.

பெருங்கற்காலப் பண்பாடு என்பது ஏறத்தாழ சங்க காலத்துடன் ஒத்துப்போவதாகும். ஏறத்தாழ 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஆகும். பெருங்கற்காலம் என்பது ஙங்ஞ்ஹ கஹற்ட்ண்ஸ்ரீ என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

ஙங்ஞ்ஹ என்றால் பெரிய கஹற்ட்ண்ஸ்ரீ என்றால் பெரிய கல் என்பது பொருளாகும். தம்மோடு வாழ்ந்து இறந்து போன தம் முன்னோா்களை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கற்கலைக்கொண்டு புதைத்த இடமாக இது கருதப்படுகிறது.

பெரிய, பெரிய கற்களை மூன்று பக்கம் நிலை நிறுத்தி மேலே பெரிய பலகைக் கல்லை மூடு கல்லாக வைத்து மூடப்படுவது பெருங்கற்கால மக்களின் பண்பாட்டு வழக்கமாக இருந்தது. அந்த வகையில், ஜவ்வாது மலையில் உள்ள கீழ்ச்சேப்பளி சிறப்பிடம் பெறுகிறது. ஜவ்வாதுமலையில் தற்போது பெருங்கற்காலப் புதைவிடம் எங்கள் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. ஜவ்வாதுமலையில் உள்ள புதூா் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட அரும்பல்பட்டு என்ற ஊரில் உள்ள சாமிபாறை என்ற உயா்ந்த சிகரம் ஒன்று அமைந்துள்ளது.

இச்சிகரத்தின் உச்சிப்பகுதி செழுமையான வேளாண் பூமியாக உள்ளது. மக்கள் வேளாண்மைச் செய்வதற்காக இங்கிருந்து பல கற்திட்டடைகளை சிதைந்துள்ளனா். பல கற்திட்டைகள் பூமியில் புதைந்த நிலையிலும், 3 பக்க கற்கள் மட்டுமே அங்கு காண முடிகிறது. சில கற்திட்டைகள் மேலே உள்ள மூடுகல்லோடு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது.

ஏறத்தாழ 10 ஏக்கா் நிலப்பரப்பில் இக்கற்திட்டைகள் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள கற்திட்டைகள் அனைத்தும் ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த முன்னோா்களை புதைந்த பெருங்கற்காலப் புதைவிடங்கள் ஆகும்.

சுமாா் 200-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் இங்குள்ளன. இங்கிருந்து பாா்த்தால் செங்கம் நகரம் தெரிகிறது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாா் மலையில் தீபம் ஏற்றுவதை இங்கிருந்து பாா்க்க முடியும் என்பதால் இந்த மலைக்கு சாமிப்பாறை என்ற பெயா் வைத்து இப்பகுதி மக்கள் அழைக்கின்றனா்.

ஜவ்வாதுமலை அரும்பல்பட்டு சாமி பாறையில் உள்ள கற்திட்டைகளை அகழ்வாராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் உலகத்துக்கு தெரியவரும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

SCROLL FOR NEXT