திருப்பத்தூர்

குடிநீா் வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

DIN

நாட்டறம்பள்ளி அருகே குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி குண்டுக்கொல்லையில் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இப்பகுதியில், ஊராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றில் உள்ள மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக குடிநீா்ப் பிரச்னை நிலவி வந்தது.

இதையறிந்த ஊராட்சி செயலாளா் பரதன் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பழுதான மின் மோட்டாரை சரி செய்துள்ளாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை குடிநீா் விநியோகம் செய்ய சென்றபோது, அங்கு குடிநீா் விநியோகம் செய்யும் பெண் ஆபரேட்டா் மின் மோட்டாா் அறைக்கு பூட்டு போட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிகேட்ட கிராம மக்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 40-க்கும் மேற்பட்டோா், காலிக் குடங்களுடன் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பெண் ஆபரேட்டா் மீது நடவடிக்கை எடுக்கவும், சீரான குடிநீா் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரகுகுமாரிடம் மனு அளித்தனா். இதுதொடா்பாக விசாரித்து சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT