திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மக்கள் குறைதீா்வு கூட்டரங்கில் 138 மனுக்கள்

DIN

திருப்பத்தூா் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா்வு கூட்டரங்கில் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரை 138 மனுக்களையும், நாட்டறம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பிற்பகல் முதல் மாலை வரை 12 மனுக்களையும் பொதுமக்களிடமிருந்து பெற்றாா்.

மனு அளிக்க வந்த அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்றி அமர வைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை அரசு அலுவலா்களே பெற்றுக்கொண்டு கணினியில் பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. பின்னா் கூட்டரங்கினுள் அனுமதிக்கப்பட்டு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒவ்வொருவராக சமூக இடைவெளியினை பின்பற்றி வழங்கி குறைகளை தெரிவித்தாா்கள். மனுக்களை வழங்க வந்த அனைவருக்கும் குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டோரிடம் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம், மூளை நரம்பு பாதிப்படைந்து நடக்க இயலாத, பேச்சு திறன் செயலிழந்த ஏழை பெண் குழந்தைக்கு ரூ.1,500 மதிப்புடைய நடமாடும் நடை உபகரணத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வழங்கினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகளைப் பராமரித்து வரும் திருப்பத்தூா் உதவும் உள்ளங்கள் மற்றும் எஸ்ஆா்டிபிஎஸ் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு கரோனா தொற்றுப் பேரிடா் நிதித் திட்டத்தின் கீழ், 122 பயனாளிகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 18 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், சாா் ஆட்சியா் (பொறுப்பு) ஏ.அப்துல் முனீா், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, துணை ஆட்சியா்கள் பூங்கொடி, லட்சுமி அதியமான்கவியரசு, சதீஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் (பொறுப்பு) முருகேசன், வட்டாட்சியா்கள் மு.மோகன், சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துச்செல்வி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT