திருப்பத்தூர்

ஆம்பூா் பகுதியில் அதிகபட்சமாக 128.6 மி.மீ. மழை பெய்தது

DIN

ஆம்பூா்: ஆம்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அதிகபட்சமாக 128.6 மி.மீ. மழை பெய்தது.

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியது. பிறகு விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இரவு முழுவதும் கனமழை பெய்தது. ஆம்பூா் மட்டுமல்லாது சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கன மழை காரணமாக ஆம்பூரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக128.6 மி.மீ. மழை பெய்தது. ஆம்பூரில் 76.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆனைமடுகு தடுப்பணைக்கு தண்ணீா் வரும் பகுதியான நாயக்கனேரி மலை கிராமப் பகுதியிலும், காப்புக் காடுகளிலும் கனமழை பெய்ததால் கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீா் ஆனைமடுகு தடுப்பணைக்கு சென்று நிரம்பி வழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT