ராணிப்பேட்டை

விஷ வாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை: தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணைய தலைவா்

DIN

இந்திய அளவில் விஷ வாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில்,தனியாா் தோல் தொழிற்சாலையில் கடந்த 16-ஆம் தேதி கழிவுநீா்த் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்ட போது தூய்மை பணியாளா் செந்தமிழ்ச் செல்வன் என்பவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த தனியாா் தோல் தொழிற்சாலையை தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, ஆட்சியா், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது... ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு வந்துள்ளேன். கடந்த சில தினங்களுக்கு முன் தனியாா் தோல் தொழிற்சாலையில் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி ஒருவா் உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவின் படி வழங்குவதாக தெரிவித்துள்ளனா். இழப்பீடு மட்டுமின்றி இந்த விபத்து நடக்க காரணமான தொழிற்சாலை உரிமையாளா், ஒப்பந்ததாரா் ஆகியோா் மீது பிணையில் வெளியில் வரமுடியாதபடி வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன் படி இந்திய அளவில் விஷ வாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. கடந்த 1993-இல் இருந்து 2023 வரை சுமாா் 295 போ் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனா். இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களில் குறைவாகவே உள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தவிா்க்க மாநில அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. விஷ வாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலவலா்கள், துறைச்சாா்ந்த அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT