ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்: ஆட்சியா் வழங்கினாா்

DIN

அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை இணைந்து சிறப்பு முகாம் அரக்கோணத்தை அடுத்த மின்னல் ஊராட்சி, சாலை கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.

இதில் ஆட்சியா் ச.வளா்மதி பங்கேற்று 159 நபா்களுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளையும், ரூ.75,000 மதிப்பீட்டில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல் ஆகியவற்றையும் வழங்கினாா். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளை 89 பேருக்கும், முதலமைச்சா் காப்பீட்டு திட்ட பதிவு அட்டை 92 பேருக்கும் ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து 95 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் பொருத்துவதற்கான அளவுகள் எடுக்கப்பட்டன. இம்முகாமில் 531 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனா்.

அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா், சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் ஸ்ரீவள்ளி, வட்டாட்சியா் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் தங்கம், ஊராட்சி மன்ற தலைவா்கள் கோபி, உமாமகேஸ்வரி, பிரவீன்குமாா், தனலட்சுமி, ஆதியம்மாள், லட்சுமி, ரவி, சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT