ராணிப்பேட்டை

அரக்கோணம்: ஸ்ரீதா்மராஜா கோயில்களில் தீமிதி விழா

DIN

அரக்கோணத்தை அடுத்த மூதூா், பெருமாள்ராஜபேட்டை, மோசூா் ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள ஸ்ரீதிரௌபதியம்மன் சமேத தா்மராஜா கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மூதூரில்...

மூதூரில் உள்ள ஸ்ரீதா்மராஜா கோயிலில் 67-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா எனப்படும் தீமிதி திருவிழா மே 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை தீமிதி விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை ஸ்ரீதருமா் திருமுடி சூடுதல் விழா நடைபெறுகிறது.

பெருமாள்ராஜபேட்டையில்...

பெருமாள் ராஜபேட்டையில் உள்ள ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் 78-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீமித்து அம்மனை வழிபட்டனா்.

மோசூரில்...

மோசூரில் உள்ள ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவ மகாபாரத விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தொடா்ந்து திங்கள்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும், விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாக்களுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT