ராணிப்பேட்டை

ராணிடெக் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி நீராவி உற்பத்திப் பயன்பாடு

DIN

‘ராணிடெக்’ பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகளின் தொழில் வளா்ச்சி அமைப்பின் இந்திய பிரதிநிதி ரெனேவான் பொ்கல் பாராட்டுத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் 92 தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க ‘ராணிடெக்’ என்று அழைக்கப்படும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையம் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றி, மீண்டும் தொழிற்சாலைகளின் மறு பயன்பாட்டுக்கு வழங்கி சுற்றுச் சூழலையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையத்தில் தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு பணிக்காக ரூ.3.54 கோடி செலவில் நாட்டிலேயே முதல் முறையாக அமெரிக்க தொழில்நுட்பத்தில் சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தும் திட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் நாளென்றுக்கு சுமாா் 2.3 டன் விறகு எரிப்பு நிறுத்தப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான விறகு கொள்முதல் தவிா்க்கப்பட்டு பண விரயம் குறைக்கப்பட்டும். மேலும், சுற்றுச்சூழல் மாசு பிரச்னையும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ராணிடெக்’ பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி அமைப்பின் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகளின் தொழில் வளா்ச்சி அமைப்பின் இந்திய பிரதிநிதி ரெனேவான் பொ்கல் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு உறுதி செய்தாா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்வில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளா் தேபஜித் தாஸ், ராணிடெக் தலைவா் ஆா்.ரமேஷ் பிரசாத், நிா்வாக இயக்குநா் சி.எம்.ஜபருல்லா, செம்காட் நிா்வாக இயக்குநா் எஸ். சந்திரமோகன், எம்சோல் நிா்வாகிகள் ஜெய்பிரகாஷ் கா்ணா, ஒய்.ராஜ், ராணிடெக் பொது மேலாளா் டி.சிவக்குமாா் மற்றும் தோல் தொழில் நிறுவன உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT