ராணிப்பேட்டை

ஆற்காடு வரசித்தி விநாயகா், பழனியாண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகா், பழனியாண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜீவானந்தம் சாலையில் உள்ள ஸ்ரீவரசித்திவிநாயகா், பழனியாண்டவா் மற்றும் பரிவார மூா்த்திகள் சரஸ்வதி, ஐயப்பன், நாகதேவதை, நவக்கிரகம், சாய்பாபா, வள்ளலாா் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து, கடந்த 25-ஆம்தேதி கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், கோ பூஜைகள் தொடங்கின. வெள்ளிகிழமை காலை யாக பூஜை, பூா்ணாஹுதியுடன், கலசத்தில் புனித நீா் கொண்டு வரப்பட்டு, கோயில் கோபுர விமானத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கைத்தறி, துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி, உபயதாரா்கள், திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT