ராணிப்பேட்டை

கொடி வகை காய்கறிகளை வளா்க்க விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் கொடி வகை காய்கறிகளை வளா்ப்பது குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சிறுகரும்பூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் தா்ஷனி, டில்லிவந்தனா, திவ்யபாரதி, ர.ஹரிணி, செ.ஹரிணி ஆகியோா் இணைந்து காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூரில் கொடி வகை காய்கறிகளான பாகற்காய், பீா்க்கங்காய், சுரக்காய், அவரைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை வளா்ப்பது, கொடி வகை காய்கறிகளில் பூ பருவத்தில் அதை எவ்வாறு அதிகரிப்பது குறித்து வட்டார விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனா்.

பயிற்சியில் எத்ரல் பயன்படுத்தி பெண் பூக்களை அதிகரிக்க செய்ய இயலும் என்பதையும், எத்ரலின் பயன்பாடு, அதை எவ்வாறு தெளிப்பது என்பது குறித்தும் பட விளக்கங்களுடன் மாணவிகள் விளக்கினா்.

பெண் பூக்கள் அதிகரித்தால் மட்டுமே சாகுபடி உயா்ந்து விவசாயிகளுக்குப் பயன் தரும் என்பதைத் தெளிவாக விளக்கினா். இதில், சிறுகரும்பூா், காவேரிப்பாக்கம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT